Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புதிய டிரக் டயரை அறிமுகம் மிச்செலின் நிறுவனம்

புதிய டிரக் டயரை அறிமுகம் மிச்செலின் நிறுவனம்

பிரத்​யேக கார்​பி​யான் கலவை தொழில்​நுட்​பம் மூலம் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த டயர், மற்ற டயர்​களைக் காட்டிலும் 25% வரை கூடு​தல் ஆயுள்​காலத்​தை கொண்​டுள்​ளது.

பகிரவும் WhatsApp Facebook

அதிக எரிபொருள் சிக்​க​னத்தை வழங்​கும் வகையிலான டிரக் டயரை மிச்செலின் நிறு​வனம் அறி​முகம் செய்​துள்​ளது.

முன்​னணி டயர் தொழில்​நுட்ப நிறு​வன​மான மிச்​செலின், நெடுஞ்​சாலைகளில் பயன்​படுத்​து​வதற்​காக வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள ‘MICHELIN X Multi Energy Z2’ என்ற புதிய டிரக் டயரை சென்​னை​யில் அறி​முகம் செய்​துள்​ளது. சென்​னை​யில் உள்ள மிச்​செலின் நிறு​வன தொழிற்​சாலை​யில் இவை தயாரிக்​கப்​படு​கின்​றன.

மிச்​செலின் நிறு​வனன் நிர்​வாக இயக்​குநர் சாந்​தனு தேஷ்​பாண்டே கூறிய​தாவது: வாக​ன இயக்​கச் செல​வில் எரிபொருள்தான் 50 சதவீதம் பங்​கு வகிக்கிறது. எரிபொருள் சேமிப்பை முன்னிறுத்தி மிக்சலின் புதிய டிரக் டயரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டிரக் டயர், மற்ற நிறுவனங்களின் டயர்​களு​டன் ஒப்​பிடும்​போது 6 முதல் 13 சதவீதம் வரையிலான எரிபொருளை சேமிக்கும். 

பிரத்​யேக கார்​பி​யான் கலவை தொழில்​நுட்​பம் மூலம் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த டயர், மற்ற டயர்​களைக் காட்டிலும் 25 சதவீதம் வரை கூடு​தல் ஆயுள்​காலத்​தை கொண்​டுள்​ளது. இதனால் டயர் பராமரிப்பு செலவு குறை​யும். ஈரமான மற்​றும் உலர்ந்த சாலைகளில் சிறந்த பிடிப்பை வழங்​கும் வகை​யில் இந்த டயர் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. 

மேலும், சுற்​றுச்​சூழல் பாது​காப்புக்கும் உகந்தது. இதன்​மூலம் வாகனங்களுக்கான இயக்​கச் செல​வு​களைக் குறைந்​து, உற்​பத்தி திறன் அதிகரிக்கும். இவ்​வாறு அவர் கூறி​னார். புதிய டயர் நேற்று விற்​பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மிச்​செலின் டயர்ஸ் அண்ட் சர்​வீஸ் கடைகள் மற்​றும் அங்​கீகரிக்​கப்​பட்ட 300 விற்​பனை​யாளர்​களிடம் இந்த டயர் கிடைக்​கும்​ என்​று நிறு​வனம்​ தெரி​வித்​துள்​ளது.

முந்தைய செய்தி
மணிக்கு 790 கிலோ மீட்டர்- உலக சாதனை படைத்த ட்ரோன்
அடுத்த செய்தி
'சர்வதேச காரணிகளால் சரிந்த தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு'

தொடர்புடைய செய்திகள்